தெலுங்கு திரையுலக இயக்குனர்கள் பற்றி புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு எதிராக போராடி வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இந்நிலையில் அவர் நேற்று ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நடிகை அபூர்வா, சமூக ஆர்வலர் சுஜாதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தெலுங்கு திரையுலகில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து இயக்குனர்களுமே படுக்கைக்கு வருமாறு நடிகைகளை அழைத்துள்ளனர். தங்களின் மானம் மற்றும் கெரியர் போய்விடும் என்பதால் பயந்து கொண்டு பல நடிகைகள் அதை வெளியே சொல்வது இல்லை என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.