கர்பிணி மரணம் ! மருத்துவருக்கு அடி, உதை- வீடியோ

Oneindia Tamil 2018-05-14

Views 590

மருத்துவமனையில் கர்பிணி பெண் உயிரிழந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்த சுகுமார் என்பவரது மனைவி உஷா 8 மாத கற்பினியாக இருந்துள்ளார். கருத்தரிப்பில் இருந்தே திருமுல்லைவாயிலில் ஷெரிஷ் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உஷாவிற்கு சிகிச்சைக்காக கர்ப்பபையில் தையல் போடப்பட்டுள்ளது.பின்னர் தற்போது 8 மாத முடிவில் அந்த தையலை அகற்ற வேண்டும் என மருத்துவர் கூறியுள்ளார். இதையடுத்து நேற்று இரவு மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட உஷாவிற்கு இரவே தையலை அகற்றும் சிகிச்சை நடைபெற்றுள்ளது.அப்போது திடீரென உஷா உயிர் இழந்துள்ளார்.இது குறித்து உஷாவின் கணவர் சுகுமார் தவறான சிகிச்சை காரணமாக உஷா உயிர் இழந்துள்ளதாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து உஷாவின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைச் செய்யப்பட்டது.பின்னர் மாலை திருமுல்லைவாயில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் உயிர் இழப்பிற்கு காரணமான ஷெரிஷ் மருத்துவமனை உஷாவின் உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் கடும் வாக்குவாதத்துடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS