ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி இதுவரை 9 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி தனது கடைசி 3 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. இந்தூரில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி கண்டு இருந்தது. இந்த நிலையில் ஒருநாள் இடைவெளியில் இரு அணிகளும் மீண்டும் மோதுகின்றன.