லாரியும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஜவுளி வியாபாரி மனைவி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்
திண்டுக்கலை சேர்ந்த ஜவுளி வியாபாரி அய்யப்பன் மனைவி தனது உறவினர் மணிகண்டராஜாவோடு மோட்டார் சைக்கிளில் நிலக்கோட்டை நாலு ரோடு சாலையில் வந்துகொண்டிருந்தார் அப்போது வத்தலக்குண்டுவிலிருந்து எதிரே வந்த லாரி எதிர்பாராவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் கீழே விழுந்த சுகுணாதேவி லாரி சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் பலியானார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.