இரு சக்கர வாகனத்தின் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் மாவட்டம் வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரபாபு வழக்கறிஞராக வேலை செய்து வந்தார். வேலையை முடித்துக் கொண்டு திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சந்திரபாபு சென்றுகொண்டிருந்தார் . அப்போது எதிரே வந்த வேன் ஒன்று நேருக்கு நேர் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சந்திரபாபு பலியானார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்திரபாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்