கேரளாவில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவரின் முகத்தில் மனைவியே கூலிப்படையை ஏவி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் போத்தன்சேரியை சேர்ந்தவர் பஷீர். 32 வயதான இவருக்கு 29 வயதில் சுபைதா என்ற மனைவி உள்ளார். கடந்த 2 வாரத்துக்கு முன்பு கணவன்- மனைவி இருவரும் இரவு வீட்டில் தூங்கியபோது உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர், கையில் வைத்திருந்த ஆசிட்டை பஷீரின் முகத்தில் வீசினார்.