கணவனைத் காதலுடன் சேர்ந்து கொன்றுவிட்டு பின்னர் காதலன் முகத்தில் ஆசிட் வீசி ஆள்மாறாட்ட நடகமாடிய தெலங்கானாவைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்களை மிஞ்சும் வகையில் நடந்தேறியுள்ள இந்த கொலை, ஆள்மாறாட்ட சம்பவம் உயிரிழந்வரின் குடும்பத்தை அச்சமடையச் செய்துள்ளது. தெலங்கானாவில் உள்ள நாகர்கூணல் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் ரெட்டி என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுவாதி என்பவர் திருமணம் செய்துள்ளார். ஆனால் அவருக்கும் ராஜேஷ் என்பவருக்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதால் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளார்
இதன்படி கடந்த நவம்பர் 26ம் தேதி சுதாகர் தூங்கிக் கொண்டிருந்த போது சுவாதியும், அவரது காதலன் ராஜேஷூம் இணைந்து கம்பியால் தலையில் அடித்து சுதாகரைக் கொன்றுள்ளனர். இதனையடுத்து இறந்தவரின் உடலை மசியம்மா காட்டுப் பகுதியில் புதைத்தும் உள்ளனர்.
இதோடு காரியத்தை முடிக்கவில்லை கணவனுக்கு பதிலாக அந்த இடத்தில் ராஜேஷை கொண்டுவர அடுத்த சதியையும் சுவாதி செய்துள்ளார். காதலர் ராஜேஷ் முகத்தில் ஆசிடை வீசிவிட்டு, தனது கணவர் முகத்தில் தீக்காயம் பட்டுவிட்டதாக அவரது குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளார்.