மனநலம் குன்றிய எச் ராஜா!.. நாராயணசாமி அறிவுரை- வீடியோ

Oneindia Tamil 2018-04-20

Views 529

பாஜகவினர் ராஜாவுக்கு மனநல சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் நாராயணசாமி , மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் தற்போது பணத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளது என்றும் இதற்கு மத்திய அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் மக்களின் பிரச்சனைகள் பற்றி சிந்திக்காத பிரதமர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார் என நாராயணசாமி தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பல்வேறு விதமாக தரம் தாழ்ந்து பேசி வரும் ஹெச்.ராஜா மனநல வைத்தியம் பார்ப்பது நல்லது பாஜக நிர்வாகிகளும் ஹெச்.ராஜாவை மனநல மருத்துவமனைக்கு கொண்டு சென்று வைத்தியம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட அவர் தமிழக அரசு தொடர்ந்து பாஜக கட்டுப்பாட்டில் உள்ளது இருப்பினும் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

des : Chief Minister Narayanasamy said that the BJP needs mental health treatment.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS