ஆன்மீக அரசியல் தென்றல் போன்றது சொல்கிறார் எச். ராஜா- வீடியோ

Oneindia Tamil 2018-01-04

Views 392

திராவிட இயக்கங்களின் அரசியல் காட்டு மிராண்டி போன்றது என்றால் ஆன்மீக அரசியல் தென்றல் போன்றது என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

வேலூரில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் விடுதலை சிறுத்தை கட்சி திருவண்ணாமலையில் உள்ள இந்து கோவிலுக்கு வெடிகுண்டு வைத்து தகர்போம் என்று செயல் அலுவலருக்கும், கோவில் அதிகாரிக்கும் மிரட்டல் விடுத்துள்ளது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் மிரட்டல் விடுத்த அக்கட்சியினர் மீது மெத்தனம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தமிழகத்தில் நாத்தீக அரசியலை திராவிட கட்சிகள் செய்யும் போது ஆன்மீக அரசியல் இருக்க கூடாது என்று கேள்வி எழுப்பிள்ள அவர் திராவிட இயக்கங்களின் அரசியல் காட்டுமிராண்டி போன்றது என்றும் ஆன்மீக அரசியல் தென்றல் போன்றது என்றும் கூறினார்.

Des : The political spectacle of the Dravidian movements is like a mirror of spiritual politics like the BJP national secretary H. Raja said.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS