ஐபிஎல் சீசன் 11ல் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 13வது ஆட்டத்தில், தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், வெற்றிக்கு திரும்பியுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோத உள்ளன. ஐபிஎல் சீசன் 11ல் மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்க உள்ளன. சீசன் துவங்கி ஒரு வாரமாகியுள்ள நிலையில், இதுவரை 12 ஆட்டங்கள் முடிந்துள்ளன.
அனைத்து அணிகளுமே தலா 3 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. அதில் சன் ரைசரஸ் ஐதராபாத் அணி மூன்றிலும் வென்று, 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வென்றதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
delhi derdevils vs kolkatta knight riders match held on today