ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்தியாவிற்கு ஐபிஎல் போட்டிகளை காண வர இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை இருப்பதால், ஒரு ரசிகனாக போட்டியை காண உள்ளதாக அவர் கூறியுள்ளார். கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஒருவருடம் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய வீரர் கேமரூனுக்கு 9 மாதம் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் முழுக்க இனி வார்னர் கேப்டன், துணை கேப்டன் போன்ற தலைமை பொறுப்புகளை வகிக்க முடியாது. வார்னர் இது குறித்து மிகவும் சோகமாக கண்ணீருடன் பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
australia cricket player will come to india for watch ipl matches