ராக்ஸ்டார் ரமணியம்மா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். ராக்ஸ்டார் ரமணியம்மாவின் பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் சின்னத்திரையில் அறிமுகமாவதற்கு முன்பே வெள்ளித்திரையில் பல பாடல்களைப் பாடியுள்ளாராம். சினிமாவில் 'தெனாவட்டு', 'காதல்' உட்பட பல படங்களில் ரமணியம்மா பாடியுள்ளாராம். விஜய் ஆண்டனி படத்திலும் ஒரு சில பாடல்கள் பாடியுள்ளாராம். தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் ராக்ஸ்டார் ரமணியம்மாவின் பாடல்கள் தற்போது பட்டிதொட்டியெங்கும் ஒலித்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர்கள் பலரும் தங்கள் இசையில் பாடவைப்பதாகக் கூறியுள்ளனராம். இவரை கண்டிப்பாக என் இசையில் பாட வைக்கின்றேன் என யுவன் ஷங்கர் ராஜா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது வாக்கு கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் டி.இமான் கலந்துகொண்டபோது, தாய் பாசம் மிகுந்த ஒரு பாடலை அவர் முன்பு பாட, இமான் கண் கலங்கிவிட்டார். தற்போது, விஜய் சேதுபதி, சாயிஷா சைகல் நடிக்கும் 'ஜுங்கா' படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளாராம் ரமணி அம்மாள். சித்தார்த் விபின் இசையில் ராக்ஸ்டார் ரமணியம்மாள் பாடியிருக்கும் பாடல் வெளிவந்தபிறகு இன்னும் பிரபலமாவார் எனக் கூறப்படுகிறது.
Famous singer Rockstar Ramani ammal to sing in the movie 'Junga' lead by vijay sethupathi.