காவிரி விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 29-ந் தேதிக்குள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வில்லை என்றால் தமிழக எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அகில இந்திய அளவில் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும் நியூட்ரினோ ஆராய்ச்சியை எதிர்க்க வில்லை. அதற்கு தமிழகம் பொருத்தமான இடம் இல்லை என்றும் தெரிவித்தார் மேலும் டெல்டா மாவட்டங்களில் 28 ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து மத்திய அரசு மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற்சிக்கிறது. என்றும் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் உச்ச நீதி மன்றத்தின் புதிய வழிகாட்டுதல்களை எதிர்த்து மத்திய அரசு மேல் முறையீடு செய்ய வலியுறுத்தி 28-ந் தேதி சென்னையில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்
des : Tamil Nadu MPs to resign in the Cauvery case