சங்க பணத்தை கையாடல் பண்ணியிருந்தால் நாங்கள் ஏன் பொதுக்குழுவை கூட்டப் போகிறோம்? என மீடியா முன்பு அன்று சமாளித்துப் பேசினார் விஷால். ஆனால் உண்மையில் சங்கப் பணமான 3 கோடியே 40 இலட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சங்கத்தில் பொறுப்பிற்கு வந்தவர்கள் யாரும் நிரந்தர வைப்புத் தொகையாக போடப்பட்ட 7கோடியே 40 இலட்சத்தில் பத்து வருடங்களாக கைவைத்ததில்லை. விஷாலும் இதையேதான் ராகவேந்திரா மண்டபத்தில் மீடியா முன்பு சொன்னார். எஃப் டி பணம் எந்தவிதத்திலும் எடுக்கப்படாது. அப்படியே இருக்கும் என்றார். அவர் சொன்னபடி நடந்திருந்தால் நேற்று அரையாண்டு கணக்கை சமர்ப்பித்திருக்கலாமே? ஏன் சமர்ப்பிக்கவில்லை நியாயமாரே? கணக்கு எங்கே எனக்கேட்டால் தேசியகீதம் பாடி கூட்டத்தை முடிக்கலாம்னு நேற்றுதான் தெரிஞ்சிக்கிட்டோம். உண்மையானவர்கள் என்றால் கணக்கு வழக்கை பிரதியெடுத்து ஒவ்வொருவர் கையிலும் கொடுத்திருந்தால் ஏன் இந்த சத்தம்? சங்கடங்கள் எல்லாம். உண்மை இருந்தால்தானே கொடுப்பதற்கு? கூச்சல் போடுறாங்க.. திட்றாங்கன்னு வீடியோ எடுத்து அனுப்புறீங்க.. ஏம்பா உன் வீட்டுல ஒரு இலட்ச ரூபா காணாமப் போனாலே லபோ திபோன்னு கத்தமாட்டே? ஆனா இங்கே வருடக்கணக்காக காப்பாற்றி வந்த 7.40 கோடியில் 3.40 கோடியைக் காணோம்னா கூப்பிட்டு வச்சு கொஞ்சவா செய்வாங்க. திருடனா இருந்தா என்ன செய்வீங்க? நடுத்தெருவுல கம்பத்துல கட்டி வச்சி போறவன் வர்றவன்லாம் அடிக்கமாட்டீங்க? பதவிங்கிற பேர்ல கொள்ளையடிச்சவனை நாங்க எப்படி நடத்தணும்னு எதிர்பார்க்கிறீங்க மக்களே?
Producer Suresh Kamatchi has urged President Vishal to resign from producers council