கண்ணிலிருந்து கண்ணீர் இல்ல, ரத்தம் கசிந்த பாலிவுட் நடிகை!

Filmibeat Tamil 2018-03-24

Views 180

பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் தற்போது 'ரேஸ் 3' படத்தின் ஷூட்டிங்கிற்காக அபுதாபி சென்றிருக்கிறார். இந்தப் படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். அங்கு அவர் ஸ்குவாஷ் விளையாட்டை விளையாடி இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக பந்து அவரது கண்ணில் பட்டுள்ளது. இதனால் அவருடைய கண்களில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்துள்ளது. பதறிப்போன படக்குழுவினர் ஜாக்குலினை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவரது கண்களில் இருந்து நிற்காமல் ரத்தம் வந்ததால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர். ஆனால் இன்னும் அவரது கண்களில் என்ன பிரச்சனை என்ற விவரங்களை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லையாம். இதனால், இவர் பங்கேற்கும் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். ஜாக்குலின் பற்றி 'ரேஸ் 3' படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் கூறியதாவது, ஆமாம் ஜாக்குலினுக்கு கண்ணில் அடிபட்டுள்ளது. அவருக்கு மிகவும் சாதாரண அடி தான் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

Jacqueline Fernandez has now gone to Abu Dhabi for shooting of 'Race 3'. Jacqueline injured in her eyes when she played squash.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS