படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார் பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான்.
பாலிவுட்டில் பிரபலமான நடன இயக்குனர் சரோஜ் கான்(69). அவர் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதில் தவறு இல்லை. அவ்வாறு அழைப்பதால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சரோஜ் கான் கூறியிருப்பதாவது,
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் காலகாலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு பெண்ணுடனும் நெருக்கமாக இருக்க அனைவரும் முயற்சிக்க தான் செய்வார்கள்.
ஏன் அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூட தான் இதை செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது சினிமா துறையை மட்டும் குறி வைப்பது ஏன்?. சினிமா துறை வேலையாவது கொடுக்கிறது அல்லவா?. பலாத்காரம் செய்துவிட்டு தனித்துவிடுவது போன்று இல்லை.
படுக்கைக்கு செல்வது பெண்ணை பொருத்தது. வேண்டாம் என்று நினைத்தால் வேண்டாம். சினிமா துறை பற்றி எதுவும் கூறாதீர்கள். அது எங்கள் அம்மா-அப்பா போன்றது என்றார் சரோஜ் கான்.
தேசிய விருது வாங்கிய சரோஜ் கான் ஏக் தோ தீன், சோலி கே பீச்சே உள்ளிட்ட பிரபல பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்துள்ளார். அவர் இப்படி பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பாலிவுட்டில் நடிககைளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக ஒவ்வொருவராக தெரிவித்து வருகிறார்கள். நடிகை ராதிகா ஆப்தே இது குறித்து துணிச்சலாக பேசிய நிலையில் சரோஜ் கான் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
National award winning dance master Saroj Khan has backed casting couch saying that it atleast provides employment to the girls.
#sarojkhan #castingcouch #bollywood