குரங்கணி காட்டுத் தீயில் 10 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து கொடைக்கானலில் மலையேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் குரங்கணி காட்டு பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு இரு குழுக்களாக 36 பேர் சென்றனர். ஒரு குழுவில் 24 பேரும் மற்றொரு குழுவில் 12 பேரும் சென்றிருந்தனர். இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத் தீயில் 10 பேர் பலியானதை தெராடர்ந்து குரங்கணி கொழுக்குமலையில் ட்ரெக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது கொடைக்கானலிலும் ட்ரெக்கிங் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களும் மேலாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. காட்டுத் தீ ஏற்பட்டுள்ள போது ட்ரெக்கிங் செல்வது ஆபத்து என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
Trekking is banned in Kodaikanal hill station after Kurangani forest fire inciden.