உடைத்த கோதுமை பாயாசம் ஒரு சுவையான ரெசிபி மட்டுமில்லாமல் ஆரோக்கியமான
ரெசியும் கூட. அப்படியே அதன் க்ரீமி தன்மையும், நறுமணமிக்க ஏலக்காயின்
மணமும் வீச நெய் சொட்ட சொட்ட தித்திக்கும் சுவையுடன் இருக்கும் இந்த
பாயாசம் எல்லாருக்கும் விருப்பமான ஒன்றாகவும் இருக்கும். நமது வயிற்றை
நிரப்புவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. குறைந்த
கலோரியை கொண்டுள்ள இந்த சுவையான கீர் உங்கள் டயட் பழக்கத்திலும் கண்டிப்பாக
இடம் பெற்று விடும்.இந்த டிசர்ட் குறைந்த கலோரியை கொண்டுள்ளதால் சர்க்கரை கட்டுப்பாட்டில்
இருப்பவர்கள் கூட தாராளமாக இதை உண்ணலாம். ஆனால் இதன் சுவை மட்டும்
கண்டிப்பாக நம் நாவை தித்திப்பில் ஆழ்த்தி விடும்.
இந்த பாயாசத்தை கோதி ஹக்கி, ஸ்வீட் ஹக்கி, கோதி பாயாசம் என்று நிறைய
பேர்களில் அழைக்கின்றனர்.