சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது அவர் போலீசில் எழுதி கொடுத்த கடிதம். சென்னை மதுரவாயல் ஆலபாக்கம் தனலட்சுமிநகரை சேர்ந்த மோகன், சங்கரி ஆகியோரின் மகள் அஸ்வினி (19). மோகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், தனது தாய் சங்கரியுடன் அஸ்வினி வசித்து வந்தார்.
கே.கே நகரில் உள்ள மீனாட்சி கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார் அஸ்வினி. இவரது வீடு அருகே அழகேசன் (24) என்ற வாலிபர் வசித்து வந்தார்.