பெரியார் குறித்து எச். ராஜா கூறிய கருத்துகள் மிகவும் கண்டனத்திற்குரியது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முகநூலில் அந்த கருத்தை தான் பதிவிடவில்லை என்று எச். ராஜா பல்டி அடித்துள்ளார் அதன் உண்மைத் தன்மை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டத்திற்கு பிறகு முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பெரியார் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறிய கருத்துகள் கண்டனத்திற்குரியவை. அவருடைய உதவியாளர் தான் பதிவு செய்தார் என்று எச். ராஜா கூறும் கருத்தும் அபத்தமாக உள்ளது.
Deputy CM O. Paneerselvam says will investigate the truth of H. Raja's explaination, and condemns H.Raja's comments over Periyar.