தினகரன் ஆதரவாளர்களுக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம்…
தேனியில் தனது ஆதரவாளர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டிடிவிதினகரன் இரவு தேனிக்கு சென்றார். பெரியகுளத்தில் பிரச்சாரவேனில் பொதுமக்களை பார்த்து கைஅசைத்தபடி டிடிவிதினகரன் சென்று கொன்டிருந்த போது அங்கு ஒன்று கூடியிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் டிடிவிதினகரனை பார்த்து கண்டன கோஷங்கள் மற்றும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பிஅவரது வாகத்தை முற்றுகையிட முயன்றனர் அப்போது தினகரன் ஆதரவாளர்களுக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் டிடிவி தினகரன் தனக்கு எதிர்ப்பாக கண்டன கோஷங்கள் எழுப்பிய ஓபிஎஸ் ஆதரவாளர்களை பார்த்து தனது கட்டை விரலை உயர்த்தி காட்டி சிரித்த படியே சென்றார்.
DES : Tension between Dinakaran supporters and OBC supporters