அரசாணையை ஜராக்ஸ் எடுப்பதில் ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பரப்பரப்பு
தைப்பூசத்திருவிழாவை ஒட்டி திருப்பூர் அலகுமலை முருகன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது . இந்த தேரோட்டத்தினை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார் . பின்னர் பிப்ரவரி 18 ஆம் தேதி அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்திட ஜல்லிக்கட்டு குழு வைத்த கோரிக்கையினை ஏற்று தமிழக அரசு வெளியிட்ட அரசானையை அமைச்சர் , மாவட்ட ஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர்கள் ஜல்லிக்கட்டு குழுவினரிடம் ஒப்படைத்தனர். அப்போது அரசாணையை ஜராக்ஸ் எடுக்க முற்பட்டபோது ஒபிஸ் இபிஎஸ் தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்துகொண்டு சண்டைபோட்டனர் அமைச்சர் முன்னிலையில் இரு தரப்பினரும் சண்டை போட்டதால் அவர் உடனே கிளம்பிவிட்டார் .கட்சி ஒருங்கிணைப்பு நடைபெற்ற பின்னரும் அவ்வபோது ஒபிஎஸ் இ பி எஸ் தரப்பினர் அடிக்கடி சண்டை போட்டுகொள்வது வழக்கமாகிவிட்டது
Des : The dispute between the OPS EPS Participants in the taking of the jaros