அதிமுகவின் வாக்கு வங்கியை ஈர்க்க நடிகர் ரஜினிகாந்த் முயற்சி செய்வதாக எழுந்த யூகங்களை தனது பேச்சின் மூலம் உறுதி செய்துள்ளார் ரஜினிகாந்த். Loading ad சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை, இன்று ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அரசியலில் ஈடுபட போவதாக ரஜினிகாந்த் அறிவித்த பிறகு பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த விழாவில் ரஜினிகாந்த் அதிரடியாக பேசினார். தன் மீது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பதை போலவே இருந்தது அவரது பேச்சு. எம்ஜிஆர் சிலை திறப்பில் ரஜினிகாந்த் பங்கேற்பதன் மூலம், அடுத்த எம்ஜிஆர் தான்தான் என்பதை மறைமுகமாக காட்டிக்கொண்டு அதிமுக வாக்குகளை அறுவடை செய்வதே ரஜினிகாந்த் நோக்கம் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக இருந்தது.
Rajini indicates that he will inherit MGR legacy. Rajinikanth's electrifying speech to keep his fan club intact and build his new party