ரஜினிகாந்த்தை கலாய்க்கும் அமைச்சர் ஜெயக்குமார்- வீடியோ

Oneindia Tamil 2018-03-06

Views 2.1K

தமிழில் பேசினால் தமிழ் வளராது என்கிற அரிய விஷயத்தை ரஜினிகாந்த் கண்டுபிடித்து இருக்கிறார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரியின் 30வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, நேற்று நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட இருக்கும் ரஜினி முதன்முறையாக இந்த மேடையில் அரசியல் பேசினார். அப்போது இதுவரை தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்தார். அப்போது, எம்.ஜி.ஆர் கொடுத்த நல்லாட்சியைத் தம்மால் கொடுக்க முடியும் என்று அவர் உறுதியளித்தார். மேலும், இவர் பேசும்போது தமிழில் பேசினால் மட்டும் தமிழ் வளராது. தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும் என்று ரஜினி குறிப்பிட்டார்.


TN Minister Jayakumar comments about Rajini Speech. Yesterday Rajini unveiled MGR Statue in Chennai ACS Medical College and made his first ever political speech.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS