நடிகர் கமல்ஹாசனுக்கு வரலாறு தெரியாவிட்டால் என்னிடம் போன் போட்டு சந்தேகம் கேட்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையில் கனரா வங்கியின் டிஜிட்டல் வங்கித் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் குத்துவிளக்கேற்றி தொடக்க விழாவில் பங்கேற்றார் கமல்ஹாசன்.
அப்போது அவர் பேசுகையில், இளைய இந்தியா டிஜிட்டல் உலகத்துக்கு மாறிக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் உலகம்தான், புதிய வழித்தடம் என்றார். டிஜிட்டல் கல்வி, டிஜிட்டல் பொழுதுபோக்கு என்றெல்லாம் மாறவேண்டும். டிஜிட்டலில் உலக முன்னோடிகளாக நாம் செய்யும் சாதனைகள் வெகு தொலைவில் இல்லை என்றே நினைக்கிறேன்.
என் ஆயுளுக்குள் இந்த சாதனைகளை நடக்கப் பார்த்துவிட்டுத்தான் செல்வேன். தமிழ்நாட்டில் இன்னும் பல சாதனைகள் நிகழ்வேண்டும் என்று ஆசைப்படுகிற தொண்டர்களில் நானும் ஒருவன் என்று தெரிவித்தார்.
If actor Kamal Hassan does not know the Tamilnadu history, he can call me and ask doubts, says Minister Jayakumar. Tamil Nadu has already been digitalized. Since 2001, digitalization of Tamil Nadu has begun, Jayakumar said.