குடும்பத்துடன் பயனுள்ள வகையில் எங்காவது சென்று வர வேண்டும் என்று சொன்னால் பல்வேறு இடங்கள் இருக்கிறது, அவரவர் ரசனைக்கு ஏற்ப சிலர் கோவில், தியேட்டர்,பார்க் என்று ஒவ்வொரு இடங்களை தேர்வு செய்வார்கள். அவற்றில் ஒன்று தான் மியூசியம், பொதுவாக மியூசியம் என்று சொன்னால் அங்கே நினைவுச் சின்னங்கள், மிகவும் அரிதான பொருட்கள், பழங்கால பொருட்கள் என பலவற்றை வைத்திருப்பார்கள். அதனை நாம் நேரடியாக பார்த்துவிட்டு வரலாம். சரி, இப்போது உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய மிகவும் விசித்திரமான மியூசம்களைப் பற்றியும், அங்கே வைத்திருக்கக்கூடிய அபூர்வ பொருட்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.