இப்படியும் ஒரு கணவர், மனைவிக்கு கோவில் கட்டி வழிபாடும் விவசாயி- வீடியோ

Oneindia Tamil 2018-02-24

Views 5

கர்நாடகா விவசாயி ஒருவர் தனது மனைவிக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார். கர்நாடக மாநிலம் சாம்ராஜ நகர் கிருஷ்ணபுரா பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜுசாமி. இவரது மனைவி ராஜம்மாள். ராஜூ தனது சகோதரி மகளான ராஜம்மாளை பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார்.

திருமணமான சில நாட்களிலேயே தங்களது மூன்று ஏக்கர் நிலத்தில் கோவில் ஒன்றைக் கட்ட வேண்டும் என ராஜம்மாள் விருப்பம் தெரிவித்துள்ளார். மிகுந்த கடவுள் பக்தி உடையவரான ராஜம்மாளின் ஆசையை நிறைவேற்றிட முடிவு செய்தார் ராஜு. எனவே, கோவிலைக் கட்டுவதற்கான வேலைகளை அவர் தொடங்கினார்.

ஆனால், கோவில் முழுமையாகக் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்னதாக எதிர்பாராதவிதமாக ராஜம்மாள் காலமானார். இதனால், தனது மனைவி ராஜம்மாளின் சிலையையும் தான் கட்டிய கோவிலில் வைக்க ராஜூ முடிவு செய்தார்.

In Karnataka's Krishnapura village a farmer built a temple for his wife.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS