சமூக நலனில் அக்கறை கொண்டவர் டிராபிக் ராமசாமி. இவருடைய வாழ்க்கை வரலாறு, 'டிராபிக் ராமசாமி' என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்புவும் இணைந்து 'டிராபிக் ராமசாமி' படத்தில் நடிக்க உள்ளனர். விஜய் விக்ரம் இயக்கி வரும் இப்படத்தில் டிராபிக் ராமசாமி வேடத்தில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்து வருகிறார். விஜய் விக்ரம் இயக்கி வரும் இப்படத்தில் டிராபிக் ராமசாமி வேடத்தில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்து வருகிறார். இப்படத்தில் அவரது மனைவியாக நடிகை ரோகினி இணைந்துள்ளார். இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் விஜய் ஆண்டனி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அரசியலிலும், கொள்கையிலும் மாறுபட்டவர்களாக இருந்துவரும் குஷ்பு மற்றும் சீமான் இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். கதையில் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான வேடத்தில் இவர்கள் இருவரும் நடித்துள்ளனராம்.
In the film 'Traffic Ramasamy' Director S.A.Chandrasekar plays the lead role. Seeman and Khushbu plays important roles in this film.