முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் 'துருவங்கள் 16' படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன். இவர் அடுத்து 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கிவருகிறார். 'நரகாசூரன்' படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. கார்த்திக் நரேன் இயக்கும் மூன்றாவது படத்திற்கு 'நாடகமேடை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் கௌதம் கார்த்திக், காளிதாஸ் ஜெயராம் மற்றும் ரகுமான் ஆகியோர் நடிக்கின்றனர். 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் அனைவரையும் வியக்க வைத்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் தற்போது 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கி உள்ளார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் 'துருவங்கள் பதினாறு' படத்தில் நாயகனாக நடித்த ரகுமான் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.