பாரதிய ஜனதா கட்சி பாணியில் ஒருவருக்கு ஒரு பதவி என்பதை கையில் எடுத்துள்ளது திமுக. அதன்படி இளைஞரணி செயலாளர், செயல்தலைவர் என்ற பதவியை வைத்துள்ள ஸ்டாலினும் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவில் 2 பதவிகளில் இருப்போர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் இருக்கும் காலியிடங்களுக்கு ஏற்ப புதிய நிர்வாகிகளை மாவட்ட செயலாளர்கள் நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் பொதுச்செயலாளர் அன்பழகன். ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை பாஜக கடைப்பிடித்து வருகிறது. முதல்வராக, மத்திய அமைச்சராக இருக்கும் பாஜக தலைவர்களுக்கு கட்சியில் பதவி கிடையாது. ஆனால் திமுக, அதிமுகவில் அப்படியில்லை. அமைச்சராக இருப்பவர்கள், கட்சியில் பதவியில் இருப்பார்கள். கட்சி நிர்வாகத்தில் ஒருவர் இரு பதவியில் இருப்பது சர்வ சாதாரணம். இதனால் பல தொண்டர்கள், இன்னமும் தொண்டர்களாகவே இருக்கின்றனர்.
DMK has asked its functionaries to resign if they are enjoying more than one posts. So, it is expected that DMK working president MK Stalin may soon resign from his Youth wing secretary post.