அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி நீக்கப்பட்டுள்ளார். டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்கி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர். பரிதி இளம்வழுதியுடன் தென்சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பல நிர்வாகிகளும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
திமுகவில் அசைக்க முடியாத முக்கியப் புள்ளியாக இருந்தவர் பரிதி இளம்வழுதி. திமுகவின் பாரம்பரியத்தில் வந்த இவர் திமுகவின் இளம் படைத் தளபதிகளில் ஒருவராகவும் வலம் வந்தார். எழும்பூர் தொகுதியில் அசைக்க முடியாத வேட்பாளராகவும் இவர் இருந்தார்.
ADMK expells former minister Parithi Ilamvazhuthi from party as he is back supporting TTV.Dinakaran, and few more cadres belonging to south Chennai also expelled from the party.