முதல்வர் நாராயணசாமி பஜ்ஜி, பக்கோடா விற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பிரதமர் மோடி பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பக்கோடா விற்பவர் கூட நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்தார்.
பாஜக தலைவர் அமித்ஷாவும் பக்கோடா விற்பனை செய்வது தவறல்ல என்றார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.சமூக வலைதளங்களிலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.மத்திய அரசின் பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் ஏதும் இல்லை என குற்றம்சாட்டிய முதல்வர் நாராயணசாமி இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
Puducherry Chief minister Narayanasami making pakkoda to condemnpt Prime minister modi.