தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கிடையாது. தினகரன் அணிக்கு கட்சி பெயரை வழங்க உத்தரவிட முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 டிசம்பரில் இறந்தார். இதன் பின், பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணி பிரிந்து சென்றது. அந்த அணிக்கு அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி என்றும், சசிகலா-எடப்பாடி-தினகரன் அடங்கிய அணியை, அ.திமு.க. அம்மா அணி என்றும் அழைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால், தினகரன் அணியில் இருந்த தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட பெரும்பாலானோர், பன்னீர் செல்வம் அணியை தங்களுடன் இணைத்துக்கொண்டு தினகரனை விட்டு பிரிந்தனர்.
"Dinakaran faction is not a recognized political party. We can not order party name to Dinakaran", says The Election Commission of India in Delhi high court.