குன்னூரில் இருந்து பெங்களூர் சென்ற பேருந்தில் ஒருவர் டயருக்கு அடியில் சிக்கி மரணம் அடைந்து இருக்கிறார். இது கர்நாடக மாநிலத்திற்கு சொந்தமான பேருந்தாகும். இவர் மொத்தம் 70கிமீக்கு இழுத்து செல்லப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடனத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை விளக்கிய ஓட்டுநர் அதிர்ச்சி அளிக்கும் தகவலை கொடுத்துள்ளார்.
அந்த பேருந்து தமிழ்நாட்டில் இருக்கும் குன்னூரில் இருந்து பெங்களூர் கிளம்பி இருக்கிறது. மைசூர் சாலையை பிடித்து நெடுஞ்சாலையில் சென்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு பேருந்து அங்கிருந்து கிளம்பி உள்ளது. மொஹினுதீன் என்ற ஓட்டுநர் இதை இயக்கி இருக்கிறார்.
இந்த பேருந்து பெங்களூருக்கு வெளியே 70 கிமீ இருக்கும் போது சிறிய கல் போன்ற எதோ ஒன்றில் மீது மோதியுள்ளது. ஓட்டுனருக்கு சிறிய சத்தம் மட்டும் கேட்டு இருக்கிறது. ஆனால் அவர் கண்ணாடியில் எதுவும் தெரியவில்லை என்றதும் எப்போது போல கிளம்பி பெங்களூர் சாந்தி நகர் பேருந்து நிலையத்தில் காலை நிறுத்தி இருக்கிறார்.