அதிமுக முன்னாள் அமைச்சரான வளர்மதி தான் அநாகரிகமான தரக்குறைவான வார்த்தைகளை பேசியதே இல்லை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அடித்துக் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரான வளர்மதிக்கு தமிழக அரசு அண்மையில் பெரியார் விருதை வழங்கியது. தீச்சட்டி தூக்கும் வளர்மதிக்கு எதற்கு பெரியார் விருது என சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இடம்பெறும் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரான வளர்மதி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பெரியார் விருதை பெற தனக்கு தகுதி உள்ளது என்றார்.
மேலும் மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருந்தால்தான் தமிழ்நாட்டு மக்கள் நலன் பாதுகாக்கப்படும் என்றார். தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசுடனான இணக்கம் தேவை என்றும் அவர் கூறினார்.
The former minister of the AIADMK, Valarmathis who has been speaking to the TV show, said i have never spoken of the indecent and degrading words.