கமல் ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனமும் தயாரிப்பில் விக்ரம் - அக்ஷரா ஹாஸன் நடிக்கிறார்கள்

Filmibeat Tamil 2018-01-20

Views 4.1K

கமல் ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனமும் ட்ரைடன்ட் தயாரிப்பு நிறுவனமும் இணையும் புதிய படத்தில் விக்ரம் - அக்ஷரா ஹாஸன் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் நடிகர் கமல் ஹாஸன். கமல் ஹாஸனின் சொந்தப்பட நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல். ராஜபார்வைதான் இந்த நிறுவனம் தயாரித்த முதல் படம். அதன் பிறகு ஏராளமான வெற்றிப் படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இவற்றில் மகளிர் மட்டும், நளதமயந்தி தவிர அனைத்திலும் கமல்தான் நாயகனாக நடித்தார். இப்போது மீண்டும் ஒரு புதிய படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை கமலை வைத்து தூங்காவனம் படம் இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்குகிறார். இந்தப் படத்துக்கு தனது வாழ்த்துகளை இப்படித் தெரிவித்துள்ளார் கமல் ஹாஸன்: "திரு.விக்ரம், செல்வி. அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய்த் துவங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம்." இந்தப் படத்தில் கமல் ஹாஸன் நடிப்பாரா என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. ராஜ்கமல் தயாரித்த நள தமயந்தி, மகளிர் மட்டும் போன்ற படங்களில் கமல் கடைசி நேரத்தில் கவுரவ வேடத்தில் தோன்றுவார். அதுபோல இந்தப் படத்திலும் தோன்றக்கூடும்.

Kamal Haasan's Rajkamal International is joining hands with Vikram for a new movie

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS