சன் டிவி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய சூர்யா ரசிகர்கள்

Filmibeat Tamil 2018-01-20

Views 5.6K

தரம்தாழ்ந்த விமர்சனங்களைக் கண்டு கொள்ள வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் நடிகர் சூர்யா.

நடிகர் சூர்யாவின் உருவத் தோற்றத்தை விமர்சிக்கும் வகையில் சில தினங்களுக்கு முன் சன் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பேசியிருந்தனர். இதற்கு உடனடியாக தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா மற்றும் எஸ் ஆர் பிரபு கண்டனம் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் பலர் சென்னையில் உள்ள சன் டிவி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆனால் சூர்யாவோ தன் ரசிகர்களை கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் இப்படி எழுதியுள்ளார்:

"தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும் சக்தியையும் பயனுள்ள செயல்களுக்குச் செலவிடுங்கள், சமூகம் பயன்பெற.. நன்றி அன்பான ரசிகர்களே!" என்று குறிப்பிட்டுள்ளார்.


Actor Surya has advised his fans not to wasting time in replying to irretating criticisms.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS