பத்து ஆண்டுகளுக்கு முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய அளவில் திரைப்படத் தயாரிப்பில் கால் பதித்தது. ஆனால் தயாரித்த அல்லது வாங்கி வெளியிட்ட படங்கள் பெரும்பாலும் குப்பைதான். அவற்றை தங்களின் மெகா விளம்பர யுக்தியால் வெற்றிப்படமாக அறிவித்துக் கொண்டிருந்தார்கள். முதல் படம் காதலில் விழுந்தேன். ரொம்ப சுமாரான படம். ஆனால் அந்தப் படத்துக்கு சன் வெளியிட்ட விளம்பரங்கள் இருக்கிறதே... அட்ராசியஸ்! அடுத்த படம் தெனாவட்டு. இந்தப் படத்துக்கும் இதே டைப் விளம்பரம்தான். ஆனால் திண்டுக்கல் சாரதி பரவாயில்லை எனும் அளவுக்கு இருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பிரமாண்ட படம் எந்திரன் உண்மையிலேயே பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்து அஜித் நடித்த மங்காத்தாவுக்கும் ப்ளாக்பஸ்டர்தான். குட்டிப் புலி படத்துக்குப் பிறகு படத் தயாரிப்பில் பெரிய ஈடுபாடு காட்டவில்லை சன். ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்போது இரண்டு மெகா புராஜெக்டுகளுடன் களத்தில் இறங்கியுள்ளது சன் பிக்சர்ஸ். அதில் ஒன்று ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படம். அடுத்து விஜய் நடிக்க, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம். இந்த இரண்டுமே தமிழ் சினிமாவே பெரிதும் எதிர்ப்பார்க்கும் படங்களாகியுள்ளன. இவற்றுடன் ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா 3 படத்தையும் சன் பிக்சர்ஸ்தான் தயாரிக்கிறது என்பது கூடுதல் தகவல். முன்பு சன் பிக்சர்ஸ் படங்கள் என்றாலே, இப்படித்தான் இருக்கும் என ரசிகர்களே ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் அந்த ஸ்டைலை மாற்றிக் கொண்டுள்ளது சன் பிக்சர்ஸ். வரவேற்கத்தக்க மாற்றம்தான்!
Sun Pictures entering in film production after a gap with two mega projects. Now they are making a movie with Rajinikanth and Karthik Subaraj and a new movie with vijay and A. R Murugadoss.
#sunpictures #suntv #rajinikanth #vijay