மண்ணை சோறாக உண்ணும் 100-வயது தாத்தா

Oneindia Tamil 2018-01-19

Views 3.4K

வறுமையால் 11 வயதில் மண் சாப்பிட்டு பழகியவர் 100 வயதிலும் மண் சாப்பிடும் பழக்கத்தை விடாமல் இருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசிக்கும் இந்த அதிசய தாத்தா தனது ஆரோக்கியத்தின் ரகசியமும் அது தான் என்று சொல்கிறார். கரு பஸ்வன், ஜார்க்கண்ட் மாநிலம் சகேப்கஞ்ச் மாவட்டத்தில் வசிச்கிறார். வறுமையின் காரணமாக 11 வயதில் மண் சாப்பிடத் தொடங்கியுள்ளார் கரு பஸ்வான். ஒரு நாளைக்கு ஒரு கிலோ மண் வரை கூட சாப்பிட்டு விடுவாராம் இந்த தாத்தா.
தனக்கு மண் சாப்பிடும் பழக்கம் எப்படி வந்தது என்று கூறும் பஸ்வான் "என்னுடைய நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது, போதிய வருமானம் இல்லை. ஆனால் 10 குழந்தைகளுக்கு நான் சாப்பாடு போட்டாக வேண்டும் இதனால் வாழ்க்கையில் மிகவும் விரக்தியில் இருந்தேன்."
ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளவும் நினைத்தேன், அப்போது தான் வறுமையின் காரணமாக இந்த மண் சாப்பிடும் பழக்கம் வந்தது. ஆனால் நாளாக நாளாக நான் இதற்கு அடிமையாகிவிட்டேன். இப்போது என்னால் மண் சாப்பிடும் பழக்கத்தை விட முடியவில்லை என்கிறார்



Jharkhand's 100 year old man Karu Paswan developed eating mud as a habit at his 11 years due to poverty still continuing this habit and syas without eating mud he cannot survive.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS