தினகரன் தனிக்கட்சி தொடங்கினாள் நாங்கள் செல்லமாட்டோம் .... தங்க தமிழ் செல்வன் திடீர் அறிவிப்பு

Oneindia Tamil 2018-01-19

Views 5.7K

தினகரன் புதிய கட்சி தொடங்கினால் அதில் நாங்கள் இணைய மாட்டோம் என்றும் நாங்கள் எப்போதும் அதிமுக உறுப்பினர்கள்தான் என்றும் தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். தினகரன், சசிகலாலவை ஒதுக்கிவைத்துவிட்டு அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தனியாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் கொறடா உத்தரவை மீறியதாக அவர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும் தினகரன் அதிமுகவை மீட்பார் என்ற நம்பிக்கையில் தங்க தமிழ் செல்வன், வெற்றி வேல், பழனியப்பன் உள்ளிட்ட 18 பேரும் அவருடனேயே உள்ளனர்.

இதனிடையே டிடிவி தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம் குக்கர் சின்னத்தை வைத்து புதிய கட்சியை தொடங்குவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மழுப்பலாகவே அதிமுகவை மீட்போம். குக்கர் சின்னத்தில் போட்டியிடுபவர்கள் போட்டியிட்டும், இரட்டை இலையில் போட்டியிட நினைப்பவர்கள் அதில் போட்டியிடட்டும் என்று தினகரன் பட்டும்படாமல் அளித்த பதில் குக்கர் சின்னத்தை அவர் விட மனமில்லை என்பதேயே காட்டுகிறது.

Thanga Tamilselvan says that we belongs to ADMK only, so we wont join if Dinakaran starts new party.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS