ஜெயலலிதா பிறந்த நாளுக்குள் டிடிவி தினகரன் புதியக் கட்சி தொடங்குவார் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் ஏற்கனவே தேர்தல் ஆணையம் ஒதுக்கிய அதிமுக அம்மா என்ற பெயரில் பேரவை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை மறுத்த தினகரன் தனிக்கட்சி தொடங்குவது எத்தனை கஷ்டம் என்பது தனக்கு தெரியும் என்றார். இதைத்தொடர்ந்து தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் தான் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
இந்நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் தேனியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், தமிழக அரசின் பஸ்கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
7000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் மாதம் 3000 ரூபாயை பஸ் கட்டணத்துக்கு கொடுத்துவிட்டு எப்படி வாழ்வது என கேள்வி எழுப்பினார். இபிஎஸ், ஓபிஎஸ் பாஜகவுக்கு அடிமையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.