மணிரத்னத்தின் உதவி இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் வெளியான 'லட்சுமி' குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தக் குறும்படம் கௌதம் மேனனின் 'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' யூ-ட்யூப் சேனலில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தக் குழுவின் அடுத்த குறும்படம் 'மா' படத்தின் போஸ்டரை கௌதம் மேனன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பெண்களின் வெளி, பாலியல் சுதந்திரம் ஆகியவை பற்றிப் பேசுவதாக எடுக்கப்பட்ட 'லட்சுமி' குறும்படம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால், அதிகமான பார்வைகளையும் பெற்றது. சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் மீதான விமர்சனங்களால் அதிகமாக வைரலானது.
'Lakshmi' short film directed by Sarjun has created a huge debate on social networks. Gautham Menon's 'Ondraga Entertainment' was produced this shortfilm. Gautham Menon released the poster of 'Maa', the next short film of 'Lakshmi' team.