வருமான வரி முறையாக செலுத்தாமல் தவறிய ஜாய் அலுகாஸ் நிறுவனத்தின் நகைக்கடை மற்றும் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகரிகள் இன்று அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையான ஜாய்அலுகாஸ் அதிபர் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்பு செய்துள்ளது வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஜாய் அலுகாஸ் நிறுவனத்தின் அதிபர் வீடு அலுலகம் நகைகடைகளில் இன்று காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்கலாக பிரிந்து தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட 10 இடங்களில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். சென்னை திநகரில் உள்ள ஜாய்அலுகாஸ் நகைகடையிலும் சேலத்தில் உள்ள கடையிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் நகைகடைக்குள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
Des : Joy Alugas Jewelry Income Tax Check Earlier today, the Income Tax Department of Jai Alugas' jewelery and home offices failed to pay income tax returns.