சசிகலாவின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தியதால் இபிஎஸ் ஓபிஎஸ் தரப்பினர் உற்சாகமடைந்துள்ளதாக தினகரன் அணியினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவின் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனைக்கு இபிஎஸ் ஓபிஎஸ் அணியினரும் மத்திய அரசும் தான் காரணம் என்று தினகரன் தரப்பினர் தெரிவித்தனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் வீடான வேதா இல்லத்திலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதற்கு காரணம் இபிஎஸ் ஒபிஎஸ்தான் காரணம் என்றும் தினகரன் தரப்பினர் தெரிவித்துள்ளனர். வருமான வரி சோதனையால் இருதரப்பினரும் உற்சாகம் அடைந்துள்ளதாகவும் தினகரன் அணியினர் கூறியுள்ளனர்.
Dis : Dineshan's team said that the EBS OBS side was encouraged by Sasikala's relatives and friends and late former chief minister Jayalalithaa's income tax