தங்கும் போராட்டம் நடத்திய விஏஓக்கள்- வீடியோ

Oneindia Tamil 2018-01-09

Views 94


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிரம நிர்வாக அலுவலர்கள் வட்டாச்சியாளர் அலுவலகத்தில் இரவு தங்கும் போராட்டம் நடத்தினர்.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல்கள் வழங்க வேண்டும், இணையதள வசதிக்கு உரிய தொகையை வழங்க வேண்டும் பட்டா உட்பிரிவு செய்தற்கு உரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாச்சியாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 8 வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கடந்த சில மாதங்களுக்கு முன் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நேற்று மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது. இந்நிலையில் தங்களின் கோரிக்களை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லை எனில் வரும் 10ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Des : All the demands were made in the night of staying in the Vatican Office of the Administrative Officers across Tamil Nadu.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS