விமானத்தில் கோடி கோடியாக கருப்பு பணத்தை கடத்திய விமான பணிப்பெண்-வீடியோ

Oneindia Tamil 2018-01-09

Views 2

இந்தியாவில் இருக்கும் கருப்பு பணத்தை முறைகேடான வகையில் வெளிநாட்டிற்கு கொண்டு சென்று அதை நல்ல பணமாக மாற்றுவார்கள். 'மணி லாண்டரி' என்றழைக்கப்படும் இந்த மோசடி இந்திய பொருளாதாரத்தை மிக அதிக அளவில் பாதிக்கும். வெளிநாட்டிற்கு செல்லும் கருப்பு பணம் நன்கொடை என்ற பெயரில் மீண்டும் நல்ல பணமாக நாட்டிற்கு திரும்பி வரும். ஆனால் சிவாஜி படத்தில் கட்டுவது போல அவ்வளவு எளிதாக கருப்பு பணத்தை வெளிநாட்டிற்கு கொண்டு சென்றுவிட முடியாது. பல சோதனைகள் இதில் செய்யப்படும். ஆனால் இதில் இருந்து தப்பிக்க ஒரு மோசடி கும்பல் ஜெட் ஏர்வேசின் விமான பணிப்பெண்னை பயன்படுத்தி இருக்கிறது.

ஜெட் ஏர்வேஸில் இருக்கும் 'தேவ்ஷி குல்ஷ்ரேஷ்தா' என்ற பெண் ஹாங்காங்கில் இருக்கும் மாபியா கும்பல் ஒன்றுடன் தொடர்பில் இருந்துள்ளார். இங்கிருந்து கருப்பு பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக அங்கு எடுத்து சென்று கொடுப்பதுதான் இந்த பெண்ணின் வேலை. இதற்கு இந்த பெண்ணிற்கு தனியாக பணம் கொடுக்கப்படும்.

ஹாங்காங்கில் இருக்கும் மாபியா கும்பல் தலைவன் அமித் மல்ஹோத்ராதான் அந்த பெண்ணிடம் இந்த டீலிங்கை பேசி இருக்கிறான். இந்த பெண் கொண்டு வரும் பணத்தை அப்படியே தங்கமாகவோ, டாலராகவோ மாற்றி இந்தியாவிற்கு நன்கொடை என்ற பெயரில் அனுப்பிவிடுவான். யார் கருப்பு பணம் அனுப்பினார்களோ அவர்களுக்கு பணம் சரியாக மீண்டும் சென்றுவிடும்.

Jet Airways airhostess Devshi Kulshreshtha arrested for money laundering. She was illegally smuggling black money to convert into white in Hong Kong. Police is searching the head Amit Malhotra.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS