கேப்டன் சீட்டை பிடித்த தினகரன்!- வீடியோ

Oneindia Tamil 2018-01-08

Views 7.9K

தினகரனே தன்னுடைய இருக்கை விவகாரம் இவ்வளவு வைரல் ஆகி இருக்கும் என்று நினைத்து இருக்க மாட்டார். அந்த அளவிற்கு தினகரன் இருக்கை எது என்று பலரும் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

ஆளுநர் உரையை விட இந்த 'சுயேட்சை' வேட்பாளரின் இருக்கை குறித்த தேடல்தான் மக்களிடம் அதிகமாக இருக்கிறது. அவர் சட்டசபையில் தனியாக பின்பக்கம் உட்கார வைக்கப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அவர் உட்கார்ந்த 148வது இருக்கையில் மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இன்னும் இந்த கூட்டத்தொடர் முடியும் வரை சட்டசபையில் என்னவெல்லாம் நடக்குமோ பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.தினகரன் காலையில் சட்டசபைக்கு தனியாகத்தான் வந்தார். அவருக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் பலமான வரவேற்பு அளித்தார்கள். இதை தினகரனே எதிர்பார்த்து இருப்பாரா என்று தெரியவில்லை. அவரது இருக்கை எண் 148 வரை வந்து இவர்கள் விட்டு சென்றார்கள்.




First Session of the Tamil Nadu Legislative Assembly starts today. Governor Panwari Lal Purohit inaugurates the assembly. Dinakaran participated in First Session of the TN Legislative Assembly. He got the seat number 148.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS