கோடீஸ்வரர் போல நடித்து 9 பெண்களை ஏமாற்றிய நபர் கைது- வீடியோ

Oneindia Tamil 2018-01-08

Views 6

கோவையில் 9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களிடமிருந்து பண மோசடி செய்த பலே நபர் கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்த திருமண தகவல் மையத்தை சேர்ந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருமண தகவல் மையம் உதவியோடு நடைபெற்ற இந்த மோசடி கோவை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய நடைமுறைகளையும் பயன்படுத்தி இவ்வாறு ஏமாற்று வேலைகள் நடப்பது இதனால் அம்பலமாகியுள்ளது.

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். தன்னை தொழிலதிபர் என கூறி ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் என சுமார் 9 பெண்களை மணந்து அவர்களிடம் இருந்து பணம் பறித்து பிறகு எஸ்கேப் ஆகியுள்ளார். கோவையில் உள்ள திருமண தகவல் மையத்தில்தான் இவர் தனது பெயரை பதிவு செய்திருந்தார். அதன் வழியாகவே பெண் தேடி வந்துள்ளார்.
இதேபோலத்தான், கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வசதி வாய்ப்புள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார் புருஷோத்தமன். பல தொழில்கள் இருப்பதாக ஏமாற்றியதன் விளைவாக அந்த பெண்ணை அவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

A man was arrested in Coimbatore for cheating 9 women and getting money from them. This man did the fraud with the help of Marriage Information Center.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS