சட்டசபைக்கு வெளியே தினகரன் பரபர பேட்டி- வீடியோ

Oneindia Tamil 2018-01-08

Views 18.6K

ஆளுநர் உரையில் எந்தவித முக்கிய அம்சங்களுமே கூறப்படவில்லை. எந்த அறிவிப்புகளும் இல்லை என்று டிடிவி தினகரன் எம்எல்ஏ கூறியுள்ளார். சட்டசபையில் முதல்நாளான இன்று தனி ஆளாக சென்று ஆளுநர் உரையை குறிப்பெடுக்கத் தொடங்கினார் டிடிவி தினகரன் அந்த உரையை கையில் வைத்துக்கொண்டு செய்திளாகர்களிடம் பேசினார் டிடிவி தினகரன். விஷன் 2023 என்று ஆளுநர் உரையில் கூறியுள்ளனர். அரசு மிஷினே செயல்படாத போது விஷன் எப்படி செயல்படுத்துவார்கள் என்று தினகரன் கேள்வி எழுப்பினார்.
ஓகி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேசிய பேரழிவாக அறிவிக்கவில்லை. கூடங்குளத்தில் அணு உலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆளுநர் உரை சரியான கண்துடைப்பு. மெஜாரிட்டி இருக்கிறதா என்று கேட்கும் ஆளுநர், இப்போது அரசை பாராட்டிக்கொண்டிக்கிறார். இது ஓரு சடங்குமாதிரி இருக்கிறது.

RK Nagar MLA TTV dinakaran has slamed Governor address in TamilNadu assembly and Vision 2023.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS