ரஜினியை தலைவா என்று புகழ்ந்த மலேசிய பிரதமர்- வீடியோ

Oneindia Tamil 2018-01-06

Views 1

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் ரஜினியுடனான சந்திப்பை 'இது ஒரு மிகப்பெரிய சந்திப்பு என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா இரண்டு நாட்கள் நடைபெறகிறது. நேற்று மலேசியா சென்றடைந்த நடிகர் ரஜினியை ரசிகர்கள் வரவேற்றனர்.
இன்று காலை நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இன்று மாலை நட்சத்திர கலைவிழா நடைபெறுகிறது.

இதற்காக நேற்றே நடிகர் நடிகைகள் மலேசியா சென்றுவிட்டனர். மலேசியா சென்ற அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் விமானத்தில் மலேசியா சென்றார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக்கை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் ரஜினியுடனான சந்திப்பு குறித்து மலேசிய பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியுள்ளார். அதாவது, மலேசியாவில் இன்று மீண்டும் ரஜினியுடன் மிகப்பெரிய சந்திப்பு என ரஜினியுடனான சந்திப்பை அவர் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

Malaysian Prime minister Najib Razak tweets about Rajinikanth meet. He has said that it was a great meet with Rajinikanth. Rajinikanth has gone to Malaysia for South india star festival.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS